LOADING...
பங்களாதேஷ் தேர்தல்: தாரிக் ரஹ்மான் தலைமையில் பிஎன்பி (BNP) வெற்றியை நோக்கி முன்னேற்றம்; புதிய ஆட்சி அமைகிறது!
பங்களாதேஷில் BNP தனிப்பெரும்பான்மை வெற்றியை நோக்கி முன்னேற்றம்

பங்களாதேஷ் தேர்தல்: தாரிக் ரஹ்மான் தலைமையில் பிஎன்பி (BNP) வெற்றியை நோக்கி முன்னேற்றம்; புதிய ஆட்சி அமைகிறது!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2026
07:21 am

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து தனிப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, மொத்தமுள்ள இடங்களில் 185 தொகுதிகளில் வெற்றி பெற்று பிஎன்பி ஆட்சியை பிடித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியை அமைக்கத் தேவையான குறைந்தபட்ச இடங்கள் 151 என்ற நிலையில், பிஎன்பி 185 இடங்களை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 56 இடங்களை பிடித்துள்ளது.

தேர்தல்

தேர்தல் கால வன்முறை

தேர்தல் பொதுவாக அமைதியாக நடந்ததாக அறிவிக்கப்பட்டாலும், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மோதல்களில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நோகாலி மாவட்டத்தில் உள்ள ஹாட்டியா பகுதியில் பிஎன்பி மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 31 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் சுமார் 10 லட்சம் ராணுவ மற்றும் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக அவாமி லீக் கட்சி இல்லாமல் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், 2024 எழுச்சியின் போது முன்வைக்கப்பட்ட 'ஜூலை சார்ட்டர்' (July Charter) எனும் அரசியல் சாசன சீர்திருத்த ஆவணத்திற்கு மக்கள் வாக்கெடுப்பில் 72.9% ஆதரவு கிடைத்துள்ளதாக India Today செய்தி தெரிவிக்கின்றது.

Advertisement