LOADING...
வங்கதேச தேர்தல் 2026: இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? முக்கியக் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன?
வரும் பிப்ரவரி 12-ம் தேதி பங்களாதேஷில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது

வங்கதேச தேர்தல் 2026: இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? முக்கியக் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2026
06:34 pm

செய்தி முன்னோட்டம்

ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, வரும் பிப்ரவரி 12-ம் தேதி பங்களாதேஷில் முதல் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடைக்கால தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெறும் இந்த தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி (BNP) மற்றும் ஜமாஅத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியாவுடன் தற்போதைய இடைக்கால அரசின் உறவு மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புதிய ஆட்சி அமையவுள்ள கட்சிகளின் 'இந்தியா குறித்த நிலைப்பாடு' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஎன்பி

பிஎன்பி (BNP) - தாரிக் ரஹ்மானின் நிலைப்பாடு

"எல்லாவற்றிற்கும் மேலாக வங்கதேசம்" என்ற முழக்கத்துடன் பிஎன்பி கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் அவர் மற்ற நாடுகளை "எஜமானர்களாக" அல்லாமல் "நண்பர்களாக" மட்டுமே கருதுவோம் என்று உறுதி அளித்துள்ளார். குறிப்பாக, "டெல்லியும் வேண்டாம், பிண்டியும் (பாகிஸ்தான்) வேண்டாம்; வங்கதேசமே முதன்மை" என்று அவர் கூறியுள்ளார். பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்றும், தங்கள் நாட்டு விவகாரத்தில் பிற தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

JeI

ஜமாஅத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami)

வழக்கமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட ஜமாஅத்-இ-இஸ்லாமி, இந்த முறை வியக்கத்தக்க மாற்றமாக இந்தியாவுடன் "நட்பு மற்றும் ஒத்துழைப்பு" கொண்ட உறவை வளர்ப்போம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் சுமுக உறவு பேணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஷபிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Advertisement

சிறுபான்மையினர்

இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு

வங்கதேசத்தில் சமீபகாலமாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பிஎன்பி கட்சி சிறுபான்மையினரின் உயிருக்கும், சொத்துக்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் கடுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. இருப்பினும், ஜமாஅத்-இ-இஸ்லாமி கட்சி இதுகுறித்து தெளிவான வாக்குறுதிகளை அளிக்காமல், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று மட்டும் மொட்டையாக குறிப்பிட்டுள்ளது.

Advertisement

சவால்கள்

இந்தியாவின் சவால்கள்

கடந்த பத்தாண்டுகளாக ஷேக் ஹசீனாவுடன் நெருக்கமான உறவை வைத்திருந்த இந்தியாவிற்கு, தற்போதைய அரசியல் மாற்றம் ஒரு சவாலாகவே உள்ளது. இடைக்காலத் தலைவர் யூனுஸ் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டியது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு மற்றும் 13-ம் தேதி வெளியாகும் முடிவுகள், தெற்காசியாவின் அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் செல்வாக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

Advertisement