Page Loader
அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம் 

அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம் 

எழுதியவர் Sindhuja SM
Jul 21, 2024
02:27 pm

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம் அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை ரத்து செய்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டால் தான் கடந்த சில நாட்களாக பங்களாதேஷில் அமைதியின்மை நிலவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷில் மாணவர்கள் தலைமையிலாக கடந்த சில நாட்களாக நடந்த போராட்டங்களில் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீட்டில் பெரும்பாலானவற்றை பங்களாதேஷின் உச்ச நீதிமன்றம்ரத்து செய்துள்ளது. கடந்த மாதம், உயர்நீதிமன்றம் அறிவித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இந்த எதிர்ப்பை வழங்கியுள்ளது. "உயர் நீதிமன்ற தீர்ப்பு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது." என்று அட்டர்னி ஜெனரல் ஏஎம் அமீன் உதின் கூறியுள்ளார்.

 பங்களாதேஷ் 

 பங்களாதேஷில் ஏன் பெரும் போராட்டம் வெடித்தது?

சிவில் சர்வீஸ் வேலைகளில் 5 சதவீத இடங்கள் சுதந்திரப் போர் வீரர்களின் குழந்தைகளுக்கும், 2 சதவீத இடங்கள் மற்ற பிரிவினருக்கும் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் 2018 இல் இந்த இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தது. ஆனால் ஒரு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் அதை மீண்டும் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை தொடங்கினர்.