Page Loader
இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர்
மார்ச் 8-11 வரை நடக்க இருக்கும் இந்த பயணம், இந்திய-ஆஸ்திரேலிய உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர்

எழுதியவர் Sindhuja SM
Mar 04, 2023
12:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை(ECTA) முடிப்பதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தியாவிற்கு அரசுமுறை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். மார்ச் 8-11 வரை நடக்க இருக்கும் இந்த பயணம், இந்திய-ஆஸ்திரேலிய உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், 08-11 மார்ச் வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்கிறார். அவருடன் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் செனட்டர் டான் ஃபாரெல், வடக்கு ஆஸ்திரேலிய அமைச்சர் மேடலின் கிங், மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட வணிகக் குழுக்கள் செல்கின்றன." என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா

ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்க இருக்கும் அல்பானீஸ்

அல்பானீஸ் பிரதமரான பிறகு இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. அவர் ஹோலி பண்டிகையான மார்ச் 8, 2023 அன்று அகமதாபாத்திற்கு வருவார். மேலும் அவர் டெல்லிக்குச் செல்வதற்கு முன் மார்ச் 9 ஆம் தேதி மும்பைக்குச் செல்வார். "மார்ச் 10, 2023 அன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் பிரதமர் அல்பனீஸ்க்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும். பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய/உலகளாவிய பிரச்சினைகள் தவிர, இந்தியா-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பிரதமர் மோடி மற்றும் பிரதமர் அல்பானீஸ் ஆகியோர் வருடாந்திர உச்சி மாநாட்டை நடத்துவார்கள்." என்று அதே செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அல்பானீஸ், ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.