இருட்டில் மூழ்கும் ஆசியா? பிலிப்பைன்ஸில் அவசரநிலை, இலங்கையில் மின்விளக்குகள் அணைப்பு
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரினால், ஒட்டுமொத்த ஆசிய கண்டமும் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் எரிபொருள் விநியோகம் தடைபட்டு, பல ஆசிய நாடுகள் அவசர நிலையை அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாட்டில் 'தேசிய எரிசக்தி அவசரநிலை' பிரகடனப்படுத்தியுள்ளார். அந்நாட்டின் கச்சா எண்ணெய் இருப்பு இன்னும் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. அரசு அலுவலகங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை, ஏசி வெப்பநிலை 24°C-க்குக் கீழ் குறைக்கத் தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை மாதத்திற்குப் பிறகு விமானங்களை இயக்க எரிபொருள் இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தட்டுப்பாடு
இந்தியாவின் அண்டை நாடுகளில் இருளில் மூழ்கும் அபாயம்
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கைக்கு இந்தப் போர் மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தெரு விளக்குகள், விளம்பரப் பலகைகள் மற்றும் நியான் விளக்குகளை அணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எரிபொருள் நுகர்வை 25% குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு 4 நாள் வேலை மற்றும் வீட்டிலிருந்தே வேலை (WFH) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை ரகசியமாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணங்களைக் குறைப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் வீட்டிலிருந்தே வேலை செய்ய வியட்நாம் அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, எரிபொருள் ரேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரினால் வங்கதேசத்தின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 4.8 பில்லியன் டாலர் (40%) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.