LOADING...
சிட்னி நாயகன் அகமது அல் அகமது: பழ வியாபாரியின் துணிச்சலுக்குப் பின்னால் இருந்த ராணுவப் பயிற்சி!
பழ வியாபாரியின் துணிச்சலுக்குப் பின்னால் இருந்த ராணுவப் பயிற்சி

சிட்னி நாயகன் அகமது அல் அகமது: பழ வியாபாரியின் துணிச்சலுக்குப் பின்னால் இருந்த ராணுவப் பயிற்சி!

எழுதியவர் Sekar Chinnappan
Dec 18, 2025
12:42 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற பாண்டி பீச்சில், கடந்த டிசம்பர் 14 அன்று யூதர்களின் 'ஹனுக்கா' பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நடந்தத் துப்பாக்கிச் சூடு உலகையே உலுக்கியது. இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில், பல உயிர்களைத் தனது வெறும் கைகளால் காப்பாற்றிய அகமது அல் அகமது என்ற 43 வயதுப் பழ வியாபாரி, இன்று ஆஸ்திரேலியாவின் தேசிய நாயகனாகக் கொண்டாடப்படுகிறார்.

நிகழ்வு

என்ன நடந்தது?

பாண்டி பீச் அருகே உள்ள ஆர்ச்சர் பூங்காவில் சுமார் ஆயிரம் பேர் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது சஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் ஆகிய இருப் பயங்கரவாதிகள் மக்கள் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கியால்ச் சுடத் தொடங்கினர். மக்கள் அலறியடித்து ஓடிய அந்தச் சூழலில், அங்கிருந்த ஒரு வாகனத்தின் பின்னால் மறைந்திருந்த அகமது, துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனைப் பின்புறமாகத் தாக்கி, அவனிடமிருந்தத் துப்பாக்கியைப் பறித்தார். இந்தச் சாகசச் செயலின் போது, மற்றொருப் பயங்கரவாதி நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் அகமதுவின் தோள்பட்டை மற்றும் காலில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் விடாமல் துப்பாக்கியைப் பறித்து எறிந்துவிட்டு, போலீசாருக்கு வழிவகுத்தார்.

துணிச்சல்

பழ வியாபாரிக்கு எப்படி இந்தத் துணிச்சல் வந்தது?

ஒரு சாதாரணப் பழ வியாபாரி எப்படி ஆயுதம் ஏந்தியப் பயங்கரவாதியை இவ்வளவு துல்லியமாகத் தாக்கினார் என்றுப் பலரும் வியந்தனர். இதற்குப் பின்னால் அகமதுவின் பழைய ராணுவப் பின்னணி உள்ளது. சிரியாவின் இட்லிப் மாகாணத்தைச் சேர்ந்த அகமது, 2007இல் ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்தார். அதற்கு முன்பாக அவர் சிரியாவின் ராணுவத்தில் மற்றும் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த ராணுவப் பயிற்சிதான், ஒரு பயங்கரவாதியை எப்படிக் கையாள வேண்டும், துப்பாக்கியை எப்படிப் பறிக்க வேண்டும் என்ற நுட்பத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது. அவரது குடும்பத்தினர் கூறுகையில், "அகமது ஒருப் போராட்டக் குணம் கொண்டவர், அநீதியைக் கண்டால் சும்மா இருக்க மாட்டார்" என்றுப் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மனிதநேயம்

உலகமே போற்றும் மனிதநேயம்

அகமது ஒரு முஸ்லிம், ஆனால் அவர் காப்பாற்றியது யூத மதத்தினரை என்பது குறிப்பிடத்தக்கது. "மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனிதாபிமானம் தான் என்னைத் தூண்டியது. அங்கு இருப்பவர்கள் யார், என்ன மதம் என்று நான் யோசிக்கவில்லை" என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அகமது தெரிவித்துள்ளார். அவரது இந்தச் செயலைப் பாராட்டி ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று அகமதுவைச் சந்தித்தார். மேலும், அகமதுவின் சிகிச்சை மற்றும் குடும்பச் செலவுகளுக்காகத் தொடங்கப்பட்ட 'GoFundMe' நிதித் திரட்டலில், இதுவரை இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய்) அதிகமான தொகை சேர்ந்துள்ளது.

Advertisement

தாக்குதல்

பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும், இது ஒருத் திட்டமிடப்பட்டப் பயங்கரவாதத் தாக்குதல் என்றும் ஆஸ்திரேலிய போலீசார் உறுதி செய்துள்ளனர். அகமது மட்டும் அன்று தலையிடாமல் இருந்திருந்தால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒரு போர் முனையில் கிடைத்த பயிற்சி, பல ஆண்டுகள் கழித்து இன்னொரு நாட்டில் அப்பாவி மக்களைக் காப்பாற்ற உதவியிருப்பது வியப்பிற்குரியதுதான்!

Advertisement