
சாலை வழி பயணமாக அமெரிக்கா டூ இந்தியா பயணம் செய்த நபர்
செய்தி முன்னோட்டம்
வித்யாசமான நிகழ்வுகளை நடத்தி அதன் மூலம் தனது மனநிறைவை அடைய விரும்பும் நபர்களுள் ஒருவராக விளங்குபவர் அமெரிக்கா வாழ் இந்தியரான லக்வீந்தர் சிங்.
53 வயதுக்கொண்ட இவர் சாலைவழி பயணத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா டூ இந்தியா பயணத்தினை தனது காரில் மேற்கொள்ள விரும்பிய இவர், இதற்காக யாரிடமும் ஸ்பான்சர்ஷிப் பெறவில்லை.
முழுக்கமுழுக்க தனது சொந்த பணமான சுமார் ரூ.1 கோடியினை செலவு செய்து, அவர் இந்த சாலைவழி பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
53 நாட்களுக்கு மேலான இந்த கார் பயணத்தில் லக்வீந்தர் சிங் 23 நாடுகளை கடந்து, 22,000கிமீட்டரினையெட்டி இந்தியா வந்துள்ளார்.
இரு நாடுகளும் கடல் கடந்து நிற்கும் தேசங்கள் என்பதால், முழுக்க முழுக்க காரிலேயே பயணம் செய்யமுடியாது.
கார் பயணம்
கொரோனா லாக் டவுனில் இந்தியா வர முடியாமல் தவித்த லக்வீந்தர் சிங்
அதனால், அமெரிக்க எல்லையிலிருந்து கப்பலில் தனது காரினை லண்டனுக்கு எடுத்துச்சென்று, அங்கிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு காரிலேயே சென்றுள்ளார்.
போக்குவரத்து விதிகள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்டதாக இருப்பதால், லக்வீந்தர் சிங் பல இடங்களில் அபராதம் செலுத்தநேரிட்டுள்ளது.
இதுபோன்ற தொலைதூரப்பயணம் மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் தோன்றாது.
ஏதேனும் ஒரு விஷயம் அதற்கு வித்திட்டிருக்கவேண்டும்.
அதன்படி லக்வீந்தர் சிங் இந்த பயணம் மேற்கொள்ள காரணம் கொரோனா லாக்டவுன் காலம் தான்.
அக்காலகட்டத்தில் 2 மாதம் இந்தியா செல்ல முடியாமல் இவர் தவித்துள்ளார்.
அந்த தவிப்பே அவர் இது போன்ற பயணம் மேற்கொள்ள வழிவகை செய்துள்ளது.
இந்த சாலை வழி பயணத்தில் லக்வீந்தர் சிங் உடன் அவரது மகனும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.