சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 8,400 பேர் உயிரிழந்தனர். பேரழிவுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு மத்தியில், சிரியாவை சேர்ந்த 7 வயது சிறுமி தன் பாசத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தி இருக்கும் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. ஐநா சபையின் பிரதிநிதி ஒருவர் இந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "17 மணி நேரம் தன் தம்பியின் தலையில் இடிபாடுகள் விழுந்துவிடாமல் தன் கைகளை வைத்து காத்த 7 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்." என்று அவர் தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் சிறுமியின் செயல் உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.