
இந்தோனேசியாவில் பெரும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு
செய்தி முன்னோட்டம்
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று(பிப் 17) 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் 97 கிமீ (60.27 மைல்) ஆழத்தில் இருந்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இது மலுகுவின் தலைநகரான அம்போனிலிருந்து தென்கிழக்கே 543 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
இந்தோனேசியாவின் பேரிடர் அமைப்பின்(BNPB) செய்தித் தொடர்பாளரைத் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், சுனாமி வருவதற்கான சாத்தியங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தனியார் அறிவியல் அமைப்பு ஒன்று வெளியிட்டிருக்கும் தகவல்
#Earthquake (#gempa) confirmed by seismic data.⚠Preliminary info: M6.5 || 125 km S of #Tual (#Indonesia) || 8 min ago (local time 18:37:28). Follow the thread for the updates👇 pic.twitter.com/zqSsH3eFQq
— EMSC (@LastQuake) February 17, 2023