Page Loader
கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம் 
இந்த சம்பவம் நடந்ததும் 40 மீட்பார்கள் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக அனுப்பட்டனர்

கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம் 

எழுதியவர் Sindhuja SM
Oct 28, 2023
05:12 pm

செய்தி முன்னோட்டம்

கஜகஸ்தானில் உள்ள உலகளாவிய எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். "கோஸ்டியென்கோ சுரங்கத்தில் மாலை 4 மணி நிலவரப்படி(1000 GMT) 32 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 14 சுரங்கத் தொழிலாளர்களைத் தேடும் பணி தொடர்கிறது." என்று அந்நாட்டின் அவசரகால சூழ்நிலை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கஜகஸ்தானில் உள்ள ஆர்சிலர் மிட்டல் தளத்தில் இந்த வருடம் நடக்கும் இரண்டாவது கொடிய விபத்து இதுவாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் உள்ள சுரங்கத்தில் ஐந்து சுரங்கத் தொழிலாளர்கள் இன்னொரு விபத்தில் கொல்லப்பட்டனர்.

சன்ஜவ்ச,

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த ஆர்செலர் மிட்டல்

"ஆர்சிலர் மிட்டல் உடனான முதலீட்டு ஒத்துழைப்பை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று இந்த தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே கசாக் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை ஆர்செலர் மிட்டல் மதிக்கத் தவறியதாக ஏற்கனவே பல குற்றசாட்டுகள் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோஸ்டென்கோ சுரங்கத்தில் குறைந்தது 21 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டபோது நிலத்தடியில் இருந்த 200 க்கும் மேற்பட்டவர்களில் 23 பேரைத் தேடும் பணி தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்ததும் 40 மீட்பார்கள் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக அனுப்பட்டனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.