Page Loader
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி
இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சுட்டு கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Aug 06, 2023
11:10 am

செய்தி முன்னோட்டம்

நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3-பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். தென்கிழக்கு வாஷிங்டனில் உள்ள அனகோஸ்டியா பகுதியில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சுட்டு கொல்லப்பட்டனர். 2023ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து வாஷிங்டனில் 150க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவாகி இருக்கிறது. இப்படியே கொலை எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனால், வாஷிங்டனில் இரண்டு தசாப்தங்கள் இல்லாத அளவுக்கு இந்த வருடம் கொலைகள் பதிவாகி இருக்கும். இந்த துப்பாக்கி சூடு குறித்து பேசிய வாஷிங்டன் டி.சி.யின் பொறுப்பாளர் பமீலா-ஸ்மித், "தென்கிழக்கில் நடந்த விவேகமற்ற வன்முறைச் செயல்" என்று கூறினார். அமெரிகாவில் இந்த மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் குறைந்தது ஒரு டஜன் பேர் துப்பாக்கிச் சூடுகளில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு