Page Loader
இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை
மேரியான் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Doc-1 Max இருமல் மருந்து(படம்: India Today)

இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை

எழுதியவர் Sindhuja SM
Dec 29, 2022
12:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்தால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உஸ்பெகிஸ்தான் அரசு இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. உ.பி. மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் மேரியான் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Doc-1 Max இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பு ஏறட்டுள்ளது. இது குறித்து உஸ்பெகிஸ்தான் அரசு வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்னும் மருந்தை குடித்ததால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்தை ஆய்வு செய்த போது, இதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, புழக்கத்தில் இருந்த Doc-1 Max மருந்தை அரசு முடங்கியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த குற்றசாட்டை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு கூட்டமைப் விசாரித்து வருகிறது.

29 Dec 2022

காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவம்:

இதே போன்ற சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா என்னும் நாட்டிலும் நடந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக அப்போது காம்பியா அரசு குற்றம்சாட்டியது. மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனம், கெட்டுப்போன 4 இருமல் மருந்துகளை காம்பியாவிற்கு அனுப்பி இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய விசாரணையில், மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் நிறுவனம் கெட்டுப்போன மருந்துகளை ஏற்றுமதி செய்திருப்பது உறுதியானது. இது போன்ற மாசுபட்ட இந்திய மருந்துகள் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் உலக சுகாதார நிறுவனம் இது குறித்து ஒரு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், அதேபோன்ற ஒரு நிகழ்வு உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் நடந்திருப்பதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.