LOADING...
12 டன் KitKat மாயம்! ஐரோப்பாவில் நிகழ்ந்த வினோத சாக்லேட் கொள்ளை!
ஐரோப்பாவில் சுமார் 12 டன் எடையுள்ள கிட்கேட் சாக்லேட் பார்கள் கொள்ளை

12 டன் KitKat மாயம்! ஐரோப்பாவில் நிகழ்ந்த வினோத சாக்லேட் கொள்ளை!

எழுதியவர் Venkatalakshmi V
Mar 30, 2026
10:46 am

செய்தி முன்னோட்டம்

"ஹாவ் எ பிரேக்" என்ற தனது புகழ்பெற்ற விளம்பர வாசகத்திற்கு பெயர்பெற்ற கிட்கேட் நிறுவனம், தற்போது நிஜமாகவே ஒரு பெரிய 'பிரேக்' சந்தித்துள்ளது. ஐரோப்பாவில் சுமார் 12 டன் எடையுள்ள கிட்கேட் சாக்லேட் பார்கள் ஏற்றிச் சென்ற லாரி மர்மமான முறையில் கடத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் மத்தியப் பகுதியிலிருந்து போலந்து நாட்டிற்குச் சென்று கொண்டிருந்த இந்த லாரியில், கிட்கேட் நிறுவனத்தின் புதிய ரகத்தை சேர்ந்த 4,13,793 சாக்லேட் பார்கள் இருந்தன. சனிக்கிழமையன்று நடந்த இந்தச் சம்பவத்தில், சாக்லேட் பார்களுடன் லாரியும் மாயமாகியுள்ளது. இதன் மதிப்பு மற்றும் அளவு வரவிருக்கும் ஈஸ்டர் பண்டிகை காலத்தில் விநியோகத்தைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நடவடிக்கை

நிறுவனத்தின் நூதன நடவடிக்கை

சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான Nestlé, இந்தத் திருட்டு குறித்து நகைச்சுவையாகவும், அதே சமயம் எச்சரிக்கையாகவும் கருத்துத் தெரிவித்துள்ளது. திருடப்பட்ட ஒவ்வொரு சாக்லேட் பாரிலும் ஒரு தனித்துவமான 'பேட்ச் கோடு' உள்ளது. இதை ஸ்கேன் செய்வதன் மூலம் அது திருடப்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும். அதிகாரப்பூர்வமற்ற கடைகளில் இந்தச் சாக்லேட்டுகள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி வெளியானதும் இணையவாசிகள் கிட்கேட் ஸ்லோகனை வைத்துப் பல மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விநியோகப் பங்குதாரர்களுடன் இணைந்து லாரியைத் தேடும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை என்றும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Advertisement