NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம்
    உலகம்

    100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம்

    100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 17, 2023, 04:44 pm 1 நிமிட வாசிப்பு
    100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம்
    முதலாம் உலக போர் நடந்து கொண்டிருந்த போது எழுதப்பட்ட கடிதம்

    ஒரு கடிதம், 100 ஆண்டுகளுக்கு பின், தெற்கு லண்டனில் உள்ள அதன் பெறுநர் முகவரியை அடைந்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் அரசர் என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு கடிதம் 2021ஆம் ஆண்டு தியேட்டர் இயக்குனர் ஃபின்லே க்ளெனின் 'கிரிஸ்டல் பேலஸிற்கு' வந்ததாக பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டாம்ப் மோசடி வழக்குகளில் சாட்சிக்காக அடிக்கடி அழைக்கப்படும் ஸ்டாம்ப் விற்பனையாளரான ஓஸ்வால்ட் மார்ஷின் மனைவி, கேட்டி மார்ஷுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. கிறிஸ்டெபெல் மெனெல் என்பவர் அனுப்பிய இந்த கடிதம், கடந்த வருடம் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணி பிறப்பதற்கு முன் எழுதப்பட்டதாகும். இதில் நலம் விசாரிப்பு போன்ற விவரங்கள் எழுதப்பட்டிருக்கிறது.

    இரண்டாம் எலிசபத் மகாராணி பிறப்பதற்கு முன் எழுதப்பட்ட கடிதம்

    மென்னல் என்பவர் பணக்கார தேயிலை வியாபாரியான ஹென்றி டுக் மென்னலின் மகள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் சிடன்ஹாம் வரிசையாக்க அலுவலகம் என்ற தபால் அலுவலகத்தில் எப்படியோ தொலைந்திருக்க வேண்டும் அதனால் தான் இது இத்தனை வருடங்களாக பெறுநர் முகவரியை அடையவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. சிடன்ஹாம் அலுவலகத்தை தற்போது பல வருடங்களுக்கு பின் புதுப்பித்து கொண்டிருக்கிறார்களாம். அதனால் புதுப்பிக்க மேசைகள், அலமாரிகள் போன்ற பொருட்களை நகர்த்தி இருப்பார்கள் அப்போது இந்த கடிதம் கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை கண்டுபிடித்தவர்கள் இதை பெறுநர் முகவரிக்கு அனுப்பி வைத்திருக்க கூடும் என்ற அனுமானத்தை செய்திகள் முன் வைக்கின்றன. மேலும், இந்த கடிதம் எழுதப்பட்டது முதலாம் உலக போர் நடந்த காலகட்டம் என்று CNN கூறியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    இங்கிலாந்து
    உலக செய்திகள்

    உலகம்

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் இந்தியா
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலக செய்திகள்
    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன  உலக செய்திகள்
    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலக செய்திகள்

    இங்கிலாந்து

    திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல் இந்தியா
    2024 யூரோ சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! கால்பந்து
    இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் இந்தியா
    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள் இந்தியா

    உலக செய்திகள்

    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி  உலகம்
    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே இந்தியா
    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  பாகிஸ்தான்
    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்  உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023