NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறை; இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80+ ஸ்கோருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறை; இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80+ ஸ்கோருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை
    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை

    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறை; இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80+ ஸ்கோருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 30, 2024
    02:50 pm

    செய்தி முன்னோட்டம்

    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டின் இறுதி நாளில், இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்தாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக உற்சாகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் இரண்டாவது இன்னிங்சில் 84 ரன்களை எடுத்தார்.

    இது அவரது இரண்டாவது 80 பிளஸ் ஸ்கோர் ஆகும். 340 ரன்கள் என்ற சவாலான இலக்கைத் துரத்துவதற்கான இந்தியாவின் நம்பிக்கையை அவரது ஆட்டம் உயிர்ப்புடன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதோ அவருடைய புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:-

    ஆரம்ப அடிகள்

    ஆரம்பத் தாக்குதலுக்குப் பிறகு ஜெய்ஸ்வால் இந்தியாவைக் காப்பாற்றினார்

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் ரோஹித் சர்மா (9), கே.எல்.ராகுல் (0) ஆகியோரை அடுத்தடுத்து திருப்பி அனுப்பியதன் மூலம் இந்தியா காலை அமர்வில் பெரும் அடிகளை சந்தித்தது.

    மிட்செல் ஸ்டார்க், மதிய உணவுக்கு சற்று முன் விராட் கோலியை (5) பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பியதன் மூலம் இந்தியாவின் துயரத்தை அதிகரித்தார்.

    இதனால் இந்தியா 33/3 என்ற ஆபத்தான நிலையில் இருந்தது. இதையடுத்து கூட்டு சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் தங்கள் 88 ரன் பார்ட்னர்ஷிப்புடன் ஸ்கோரை மீட்டனர்.

    கூட்டு

    இந்த கூட்டணி இந்தியாவின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தது

    ஜெய்ஸ்வால் மற்றும் பண்ட் இருவரும் தங்கள் கூட்டாண்மையின் போது மிகப்பெரிய உறுதியையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

    ஜெய்ஸ்வாலை வழக்கத்திற்கு மாறான யுக்திகளால் திணறடிக்க ஸ்டார்க்கின் முயற்சிகள் இருந்தபோதிலும், இளம் தொடக்க ஆட்டக்காரர் அசராமல் நின்று தனது அரை சதத்தை எட்டினார்.

    இதற்கிடையில், பண்ட் 29 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 121/3 லிருந்து 155/10 க்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் விரைவாக வீழ்ந்தது.

    நான்காவது டெஸ்டில் தோல்வியடைந்ததால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    புள்ளிவிவரங்கள்

    ஜெய்ஸ்வாலுக்கு இரட்டை அரைசதம்

    ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 118 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் 208 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.

    அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 அரைசதங்களை பூர்த்தி செய்துள்ளார். மேலும், நான்கு சதங்களையும் விளாசியுள்ளார்.

    16 டெஸ்டில், இடது கை பேட்டர் 55.18 என்ற நம்பமுடியாத சராசரியில் 1,766 ரன்களைக் குவித்துள்ளார் என்று ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.

    51.29 சராசரியில் 359 ரன்களுடன், பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 இல் இரண்டாவது அதிக ரன் எடுத்தவர் ஆவார்.

    சாதனைகள்

    உங்களுக்கு தெரியுமா?

    இந்த சகாப்தத்தில் வேறு எந்த வீரரும் செய்ய முடியாத சாதனையை ஜெய்ஸ்வால் நிகழ்த்தினார்.

    ஜெய்ஸ்வாலுக்கு முன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானததில் ஒரு டெஸ்டில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 75+ ரன்கள் எடுத்த கடைசி வெளிநாட்டு வீரர் நியூசிலாந்து ஜாம்பவான் மார்ட்டின் குரோவ் (1987 இல் 82 & 79) ஆவார்.

    எனினும், இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80+ ஸ்கோரை எடுத்த முதல் வீரராக ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார்.

    இதற்கிடையில், ஜெய்ஸ்வால் 2024 ஆம் ஆண்டை 54.74 சராசரியில் 1,478 டெஸ்ட் ரன்களுடன் முடித்தார்.

    சச்சின் டெண்டுல்கர் (2010 இல் 1,562) மற்றும் சுனில் கவாஸ்கர் (1979 இல் 1,555) மட்டுமே இந்திய வீரர்களில் ஒரு காலண்டர் ஆண்டில் ஜெய்ஸ்வாலை விட அதிக டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்
    "உங்களை யாரென்றே தெரியாது!": சிம்புவை இன்சல்ட் செய்தாரா விராட் கோலி? விராட் கோலி
    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்
    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை

    யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விளையாடும் 11'இல் வாய்ப்பு : உறுதி செய்தார் ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணி
    13 ஆண்டுகளில் சதமடித்த முதல் வீரர்; புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் மேட்ச்
    INDvsWI 2வது டெஸ்ட் : ஷிகர் தவானின் சாதனையை பின்னுக்குத் தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் மேட்ச்
    இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியா vs ஆஸ்திரேலியா

    டெஸ்ட் மேட்ச்

    பார்டர் கவாஸ்கர் டிராபி: இந்தியாவுக்கு எதிராக மீண்டும் அதே அணியை களமிறக்குகிறது ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டிராபி
    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் தரவரிசை
    ஆஸ்திரேலிய பிஎம் லெவன் vs இந்திய கிரிக்கெட் அணியின் முதல் நாள் பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து பார்டர் கவாஸ்கர் டிராபி
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    டெஸ்ட் கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் இங்கிலாந்தின் ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கர்
    ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க திட்டம்; உடற்தகுதியை ஆய்வு செய்கிறது பிசிசிஐ முகமது ஷமி
    பிங்க்-பால் டெஸ்ட் போட்டி: நான்கு ஆண்டுக்கு முந்தைய தோல்விக்கு பழி தீர்க்குமா இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மேட்ச்

    இந்திய கிரிக்கெட் அணி

    வினோத் காம்ப்ளியின் மறுவாழ்வுக்கு உதவ தயார்; 1983 இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சார்பாக சுனில் கவாஸ்கர் அறிவிப்பு வினோத் காம்ப்ளி
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி பார்டர் கவாஸ்கர் டிராபி
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்னென்ன? விரிவான அலசல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025