நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) பெங்களூரில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளதோடு, இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 36 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
கடைசியாக, 1988ஆம் ஆண்டு ஜான் ரைட் தலைமையிலான நியூசிலாந்து அணி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்த தோல்வியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்தியவின் ரேட்டிங் சதவீதம் 74.24இல் இருந்து 68.05 ஆகக் குறைந்தது.
தரவரிசை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை
ரேட்டிங் புள்ளிகள் சரிந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியாவுக்கு இன்னும் 7 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இந்தியா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நேரடியாக இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்ய முடியும்.
இல்லையெனில், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்கும் நிலை உருவாகும். இந்த பட்டியலில் நியூசிலாந்து 44.44 ரேட்டிங் சதவீதத்துடன் ஆறாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான வெற்றியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில், 44.44 ரேட்டிங் சதவீதத்துடன் நியூசிலாந்து ஆறாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் உள்ளது.