Page Loader
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2024
04:03 pm

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் 38.89 புள்ளி சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் 36.66 புள்ளி சதவீதத்துடன் உள்ள பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

தரவரிசை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இந்தியா

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் 68.51% உடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா தற்போதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியை பெற்றுள்ளதோடு, ஒரு போட்டியை டிராவில் முடித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக 62.50% புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், 50% புள்ளிகளுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அவற்றைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் முறையே இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்திற்கு தென்னாப்பிரிக்கா முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும், இங்கிலாந்து ஏழாவது இடத்திலும் உள்ளன. எட்டாவது இடத்தில் பங்களாதேஷும், ஒன்பதாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் உள்ளன.