INDvsAUS Final : ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரதமர் மோடி வருகை
செய்தி முன்னோட்டம்
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழுவின் போட்டிக்கு முன் பத்து நிமிட விமான நிகழ்ச்சி மற்றும் மிட் இன்னிங்ஸில் இசையமைப்பாளர் ப்ரீதமின் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கிடையில், இறுதிப் போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Air Show to be conducted after toss
தேசிய கீதம் இசைக்கப்படும்போது விமானப்படையின் ஏர் ஷோ
விமானத் தளபதியும் துணைக் குழுத் தலைவருமான விங் கமாண்டர் சிதேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய விமானப் படையின் ஒன்பது விமானங்கள் டாஸ் போட்ட பிறகு ஏர் ஷோவை நிகழ்த்தும்.
இந்த விமானங்கள் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நரேந்திர மோடி மைதானத்திற்கு மேலே செங்குத்து விமான காட்சியை நடத்தும்.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது ஒரு ஃப்ளை-பாஸ்ட் நடக்கும். எனினும், இந்திய மூவர்ணக் கொடியுடன் விமானத்தை பறக்கவிட வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்துள்ளது.
மேலும், இடைவேளையின் போது, இதுவரை உலகக்கோப்பையை வென்ற அனைத்து அணிகளின் கேப்டன்களையும் பிசிசிஐ கவுரவிக்க உள்ளது.