Page Loader
PAKvsAFG : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கான் அபார வெற்றி

PAKvsAFG : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 23, 2023
10:20 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 23) நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சபீக் 58 ரன்களும், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களும் எடுத்த நிலையில், பாகிஸ்தான் 50 ஓவர்களில் மொத்தமாக 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது 3 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Afghanistan beats Pakistan by 8 wickets

ஆப்கானிஸ்தான் பேட்டிங் அபாரம்

283 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அபாரமாக விளையாடி ரன் குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரான் 87 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 77 ரன்களுடனும், ஹஷ்மதுல்லா ஷாஹிதி 48 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமால் 49 ஓவர்களில் இலக்கை எட்டினர். மேலும், இந்த வெற்றியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.