
மகளிர் ஐபிஎல் 2023 : போட்டி தொடங்கும் நேரம் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் 2023 சனிக்கிழமை (மார்ச் 4) மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்க உள்ளது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், போட்டிக்கான தொடக்க விழா காரணமாக முதல் போட்டியின் ஆரம்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் போட்டி மட்டும் இரவு 8 மணிக்குத் தொடங்கும். டாஸ் இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
மேலும் பிரமாண்ட தொடக்க விழா மாலை 6.25 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் க்ரித்தி சனொன், ஏபி தில்லான் மற்றும் கியாரா அத்வானி கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
மகளிர் ஐபிஎல் ட்வீட்
𝗥𝗲𝘀𝗰𝗵𝗲𝗱𝘂𝗹𝗲𝗱 𝘀𝘁𝗮𝗿𝘁 𝗳𝗼𝗿 #TATAWPL 𝗼𝗽𝗲𝗻𝗶𝗻𝗴 𝗳𝗶𝘅𝘁𝘂𝗿𝗲
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
▶️Gates Open: 4 PM IST
▶️Opening Ceremony: 6:25 PM IST
▶️Match - Gujarat Giants vs Mumbai Indians
▶️Toss: 7:30 PM IST
▶️ Match Start: 8 PM IST
Details 🔽https://t.co/7i3bVgItJr