மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
புதுடெல்லியில் வியாழக்கிழமை (மார்ச் 23) நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் நிகத் ஜரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இறுதிப் போட்டியில் குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் இந்திய அணிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியனான நிது கங்காஸ் (48 கிலோ) வியாழன் அன்று கஜகஸ்தானின் அலுவா பல்கிபெகோவாவை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி தனது பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி மற்றொரு வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தற்போது வரை நான்கு பதக்கங்களை உறுதி செய்துள்ள இந்தியா, முந்தைய உலக சாம்பியன்ஷிப்பில் வென்ற மூன்று பதக்கங்களை விட அதிகமாக வென்று சாதனை படைக்க உள்ளது.