NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வெறும் ரூ.45 கோடிதான் பட்ஜெட்; ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கும் வீரர்கள் யார்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெறும் ரூ.45 கோடிதான் பட்ஜெட்; ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கும் வீரர்கள் யார்? 
    வெறும் ரூ.45 கோடி பட்ஜெட்டுடன் ஐபிஎல் ஏலத்தில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்

    வெறும் ரூ.45 கோடிதான் பட்ஜெட்; ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கும் வீரர்கள் யார்? 

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 08, 2024
    11:38 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தங்கள் அணியில் வலுவான பல வீரர்களை தக்கவைத்துள்ளது.

    ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான எம்ஐ அணி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய நான்கு சர்வதேச இந்திய நட்சத்திரங்களையும் தக்கவைத்துக் கொண்டது.

    இதனால் ஐபிஎல் 2025க்கான ​​மெகா ஏலத்தில் 45 கோடி ரூபாய் என்ற குறைந்த பட்ஜெட்டுடன் களமிறங்குவது அந்த அணிக்கு ஏலத்தில் மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ்

    ஏலத்திற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி

    எம்ஐ ஐபிஎல் 2025 ஏலத்திற்கு பிறகு ஒரு ஜோடி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களைத் தவிர, முழு இந்திய பேட்டிங் வரிசையையும் முழு வெளிநாட்டு பந்துவீச்சு வரிசையையும் கொண்டிருக்கக்கூடும் என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

    சுழற் பந்துவீச்சைப் பொறுத்தவரை நிச்சயமாக யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தரை கைப்பற்ற முயற்சி செய்வார்கள் என அவர் மேலும் கூறினார்.

    மெகா ஏலத்திற்கு முன்னதாக, சாஹலை ராஜஸ்தான் ராயல்ஸ் யுஸ்வேந்திர சாஹலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    லெக் ஸ்பின்னர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மற்றும் 200 ஐபிஎல் விக்கெட்டுகளுக்கு மேல் பெற்ற ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமைகளை யுஸ்வேந்திர சாஹல் கொண்டுள்ளார்.

    வாஷிங்டன் சுந்தர்

    வாஷிங்டன் சுந்தரின் பின்னணி

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர், டீம் இந்தியாவுக்காக டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட வாய்ப்புள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் இஷான் கிஷனை ஏலத்தில் எடுக்கலாம் என்று நினைத்தாலும், அவர்களின் பட்ஜெட் அதற்கு ஒத்துழைக்காமல் போகலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    மாறாக, சில மாற்று வழிகளையும் அவர் பரிந்துரைத்தார். அதன்படி விக்கெட் கீப்பருக்காக, குயின்டன் டி காக் அல்லது ஜிதேஷ் ஷர்மா அல்லது பில் சால்ட் போன்ற வீரர்களை குறிவைக்கலாம் என்றார்.

    இதற்கிடையே, ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஜெட்டாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    மும்பை இந்தியன்ஸ்
    டி20 கிரிக்கெட்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    ஐபிஎல் 2025

    விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு ஐபிஎல்
    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல்
    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024: இறுதிப் போட்டியில் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024
    IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக் தினேஷ் கார்த்திக்
    ஐபிஎல் 2024: தொடர் நாயகன் முதல் ஆட்டநாயகன் வரை விருது வென்ற வீரர்கள்! ஐபிஎல் 2024
    RCB அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் தினேஷ் கார்த்திக்

    மும்பை இந்தியன்ஸ்

    ஜிடி vs எம்ஐ : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    நாயிடம் கடிவாங்கிய அர்ஜுன் டெண்டுல்கர்! வைரலாகும் வீடியோ! ஐபிஎல்
    எல்எஸ்ஜி vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    'கோலி கோலி' என கோஷம் எழுப்பிய ரசிகர்கள்! ஆக்ரோஷம் காட்டிய ரோஹித் ஷர்மா! ரோஹித் ஷர்மா

    டி20 கிரிக்கெட்

    வெறித்தனம்; டி20 பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு; பிசிசிஐ திட்டம் ஷுப்மன் கில்
    இந்த நாளில்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது!! டி20 உலகக்கோப்பை
    ஐபிஎல் 2025 : மெகா ஏலத்தில் அஸ்வின் மற்றும் முகமது ஷமியை கைப்பற்ற சிஎஸ்கே திட்டம் ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025