LOADING...
குளிர்கால ஒலிம்பிக் 2026: இந்திய வீரர்களின் பங்கேற்பு, விளையாட்டுப் பட்டியல் மற்றும் முழு விவரங்கள்
குளிர்கால ஒலிம்பிக் 2026இல் இந்திய வீரர்களின் பங்கேற்பு மற்றும் முழு விவரங்கள்

குளிர்கால ஒலிம்பிக் 2026: இந்திய வீரர்களின் பங்கேற்பு, விளையாட்டுப் பட்டியல் மற்றும் முழு விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 05, 2026
01:54 pm

செய்தி முன்னோட்டம்

25 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா ஆகிய இரு நகரங்களில் நாளை (பிப்ரவரி 6, 2026) கோலாகலமாகத் தொடங்குகின்றன. வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டு நகரங்கள் இணைந்து நடத்தும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில், 90 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கின்றனர். பிப்ரவரி 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 விளையாட்டுப் பிரிவுகளில் 116 பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியா

இந்திய வீரர்களின் பங்கேற்பு

இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் இரண்டு நட்சத்திர விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் இந்தியாவின் மூவண்ணக் கொடியை இத்தாலியில் ஏந்திச் செல்லவுள்ளனர்: ஆரிப் முகமது கான்: இவர் ஆல்பைன் ஸ்கையிங் போட்டியில் பங்கேற்கிறார். ஸ்டான்சின் லுண்டுப்: இவர் கிராஸ்-கன்ட்ரி ஸ்கையிங் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்த உள்ளார். போட்டி அட்டவணை: இவர்களுக்கான போட்டிகள் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வானிலை மாற்றங்கள் மற்றும் தகுதிச் சுற்றுகளைப் பொறுத்தே துல்லியமான நேரம் அறிவிக்கப்படும்.

விளையாட்டு

விளையாட்டுப் பிரிவுகள் மற்றும் மைதானங்கள்

இந்த முறை 16 விதமான பனிச்சறுக்கு மற்றும் பனி சார்ந்த விளையாட்டுகள் நடைபெறுகின்றன. அவற்றில் சில: முக்கிய விளையாட்டுகள்: ஆல்பைன் ஸ்கையிங், ஐஸ் ஹாக்கி, பிகர் ஸ்கேட்டிங், பப்ஸ்லீ, ஸ்கை ஜம்பிங் மற்றும் ஸ்னோபோர்டு. முக்கிய மைதானங்கள்: மிலனில் உள்ள புகழ்பெற்ற சான் சிரோ ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. பிகர் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டிகள் மிலன் ஐஸ் ஸ்கேட்டிங் அரங்கில் நடைபெறும். கார்டினா பகுதியில் கர்லிங் மற்றும் பனிச்சறுக்கு போட்டிகள் நடைபெறும்.

Advertisement

சிறப்பம்சங்கள்

குளிர்கால ஒலிம்பிக்கின் சிறப்பம்சங்கள்

பிப்ரவரி 6 ஆம் தேதி சான் சிரோ மைதானத்தில் குளிர்கால ஒலிம்பிக் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி வெரோனா ஒலிம்பிக் அரங்கில் நடைபெறவுள்ளது. இத்தாலியின் கண்கவர் மலைப்பகுதிகளில் நடைபெறும் இந்தப் போட்டிகள், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement