என்ஜினியரிங் To கிரிக்கெட் : யார் இந்த ஆகாஷ் மத்வால்? சுவாரஷ்ய பின்னணி!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 எலிமினேட்டர் போட்டியில் புதன்கிழமை (மே 24) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் அபார பந்துவீச்சு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 1.4 என்ற மிகக்குறைந்த எகானாமியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் அனில் கும்ப்ளே மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி, மிகக்குறைந்த எகானாமியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
அனில் கும்ப்ளே 1.57 என்ற எகானாமியிலும், பும்ரா 2.50 என்ற எகானாமியிலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுளளது குறிப்பிடத்தக்கது.
akash madhwal background
ஆகாஷ் மத்வாலின் சுவாரஸ்ய பின்னணி
என்ஜினியரிங் பட்டதாரியான மத்வால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
2019ஆம் ஆண்டில், அவர் அப்போதைய உத்தரகாண்ட் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் மணீஷ் ஜா ஆகியோரின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து சிவப்பு பந்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார்.
அங்கிருந்து கிடுகிடுவென வளர்ந்த அவரது கிரிக்கெட் கேரியர், 2023இல் உத்தரகண்ட் மாநில அணியின் வொயிட் பால் கேப்டனாக அவரை ஆக்கியது.
இதற்கிடையே 2022இல் காயம் காரனாக சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்லில் இருந்து விலகிய நிலையில் மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்தார்.
ரிஷப் பந்துக்கு ஆரம்ப காலத்தில் பயிற்சி அளித்த அவதார் சிங் தான் இவருக்கும் பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.