NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா!
    தோனியின் ஓய்வு குறித்த ரகசியத்தை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா

    ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2023
    04:59 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடர் எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமா என்ற கேள்வி இன்னும் நீடித்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

    இந்த ஐபிஎல்லுடன் தல தோனி ஓய்வு பெற்று விடுவார் என்பதே பலரது நம்பிக்கையாகவும் உள்ளது.

    ஆனால் தோனி இது குறித்து எந்த கருத்தும் வெளியிடாமலேயே இருந்து வந்தார்.

    வர்ணனையாளர் டேனி மோரிசன் ஒருமுறை கடைசி சீசனை எப்படி அனுபவித்து விளையாடுகிறீர்கள் எனக் கேட்டபோது இது கடைசி சீசன் என தான் கூறவில்லை எனக்கூறினாலும் அடுத்தடுத்த சீசனில் விளையாடுவது குறித்தோ எதிர்கால திட்டங்கள் குறித்தோ வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

    இதனால் ரசிகர்களிடையே தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

    suresh raina reveals what dhoni said

    தோனி ஓய்வு குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா

    ஜியோ சினிமாவில் சுரேஷ் ரெய்னா பேசியபோது, நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் சீசனின் சமீபத்திய சந்திப்பில் தோனி அவரிடம் ஓய்வு குறித்து எதுவும் சொன்னாரா என கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, "கோப்பையை வென்ற பிறகு, இன்னும் ஒரு வருடம் விளையாடுவேன்." என கூறியதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் எம்எஸ் தோனி குறைந்தபட்சம் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே நடப்பு ஐபிஎல் சீசனில் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை சிஎஸ்கே கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில், அந்த அணி பட்டத்தை வெல்லுமா இல்லையா என்பது வரும் வாரங்களில் தெளிவாகத் தெரியப் போகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    எம்எஸ் தோனி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஐபிஎல்

    மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - கவுதம் கம்பீர்! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை! விராட் கோலி
    ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர்! அஸ்வினை பின்னுக்குத் தள்ளி அமித் மிஸ்ரா சாதனை! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 ஜிடி vs டிசி : டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புள்ளி விபரம்; வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2023

    குஜராத் டைட்டன்சுக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் மிட்செல் மார்ஷ் இல்லாதது ஏன்? டேவிட் வார்னர் விளக்கம்! குஜராத் டைட்டன்ஸ்
    எல்எஸ்ஜி அணிக்கு புதிய கேப்டன்? கே.எல்.ராகுலை ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்க பிசிசிஐ திட்டம்! ஐபிஎல்
    எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமன் செய்த விருத்திமான் சாஹா எம்எஸ் தோனி
    ஐபிஎல்லிலிருந்து ஜெயதேவ் உனட்கட் நீக்கம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா? ஐபிஎல்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    10 நாள் ரெஸ்ட்? சிஎஸ்கே அணிக்கு ஷாக் கொடுக்கும் பென் ஸ்டோக்ஸ்! கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : ஜடேஜாவை சமாளிப்பாரா சூர்யகுமார் யாதவ்! ஒரு ஒப்பீடு! ஐபிஎல் 2023
    எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த அஜின்கியா ரஹானே ஐபிஎல் 2023

    எம்எஸ் தோனி

    ரசிகரின் டி-ஷர்ட்டில் ஆட்டோகிராஃப் போடும் எம்.எஸ்.தோனி - வைரல் வீடியோ இந்தியா
    யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்? இந்தியா
    ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்! ஐசிசி விருதுகள்
    விவசாயி அவதாரம்! வயலில் டிராக்டர் ஓட்டும் வீடியோவை வெளியிட்ட எம்.எஸ்.தோனி! கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025