
எப்போதும் சச்சினின் பிடித்தமான உணவு இதுதானாம்! ட்விட்டரில் பகிர்வு!
செய்தி முன்னோட்டம்
இன்று ஏப்ரல் 24 இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளாகும்.
ஃபிட்னஸ், உடல் ஆரோக்கியம், உணவு என்று கவனத்தை செலுத்தும் சச்சின் அவ்வப்போது சமைத்து வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் அவர் பகிர்வார்.
அந்த வகையில், சச்சினின் பிடித்தமான உணவு என்ன என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் #AskSachin என்ற ஹேஷ்டேகின் கீழ் ரசிகர்களிடம் கேள்விகளை கேட்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அப்போது ஒரு பெண் உங்களுடைய 'சீட் மீல்' எதுவென்று கேட்க அதற்கு சச்சின் டெண்டுல்கர் பிரியாணி என்று பதில் கூறியுள்ளார்.
மேலும், ஒரு முறை என் அம்மா செய்து கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு அந்த நாள் முழுவதும் அதேபோல் பிரியாணி சாப்பிட ஆசையாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Biryaaaniiiiiii 😋 https://t.co/AsC3UbI5CM
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023