டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 ஓவர்களை கடந்த 21 ஆம் நூற்றாண்டின் முதல் தொடக்க ஜோடி!
திங்களன்று (பிப்ரவரி 6) புலவாயோவில் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் க்ரெய்க் பிராத்வைட் மற்றும் டாகெனரைன் சந்தர்பால் ஆகியோர் 21வது நூற்றாண்டில் ஒரு இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கு மேல் பேட் செய்த முதல் தொடக்க ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். மேலும் பிராத்வைட் மற்றும் சந்தர்பால் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 600 பந்துகளுக்கு மேல் சந்தித்த இரண்டாவது தொடக்க ஜோடி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்கள். முன்னதாக, 2000 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கண்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 114.2 ஓவர்கள் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 335 ரன்களை குவித்த இலங்கையின் மார்வன் அதபத்து மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியோரின் முந்தைய சாதனையை பிராத்வைட் மற்றும் சந்தர்பால் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே vs மேற்கிந்திய தீவுகள் முதல் டெஸ்ட் நிலவரம்
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஜிம்பாப்வே சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, பிப்ரவரி 4ஆம் தேதி முதல், முதல் டெஸ்டில் ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, இடையிடையே மழையால் நிறுத்தப்பட்டு மீண்டும் விளையாடி வரும் போட்டியில் இன்று மூன்றாவது நாளில் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஜோடி 114.1 ஓவரில் 336 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. இன்று தனது முதல் விக்கெட்டை இழந்தது. இதற்கிடையில், மேற்கிந்தியத் தீவுகளின் டாகெனரைன், 2ஆம் நாள் தனது மூன்றாவது ஆட்டத்தில் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். அந்த அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.