'5 விக்கெட் கிளப்பிற்கு வரவேற்கிறோம்' : ஆகாஷ் மத்வாலின் சாதனைக்கு ஜாம்பவான் கும்ப்ளே வாழ்த்து!
செய்தி முன்னோட்டம்
புதனன்று (மே 24) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2023 எலிமினேட்டரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் அனைவரையும் கவர்ந்தார்.
இதன் மூலம் ஐபிஎல்லில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் குறைந்த எகானமி கொண்டவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில் ட்விட்டரில், முன்னாள் இந்திய கேப்டன் கும்ப்ளே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு பாராட்டு தெரிவித்து கிளப்பிற்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
கும்ப்ளே தவிர, வீரேந்திர சேவாக், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது கைப், ஜாகீர் கான் போன்ற பல கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் மத்வாலின் சாதனையை பாராட்டியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Great bowling in a high pressure game, Akash Madhwal. Welcome to the 5/5 club 👏🏾 @mipaltan @JioCinema
— Anil Kumble (@anilkumble1074) May 24, 2023