Page Loader
மகளிர் பிக் பாஷ் லீக்கில் உடைந்த பேட்டுடன் சிக்சர் விளாசிய வீராங்கனை
மகளிர் பிக் பாஷ் லீக்கில் உடைந்த பேட்டுடன் சிக்சர் விளாசிய வீராங்கனை

மகளிர் பிக் பாஷ் லீக்கில் உடைந்த பேட்டுடன் சிக்சர் விளாசிய வீராங்கனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 22, 2023
04:03 pm

செய்தி முன்னோட்டம்

பிரிஸ்பேன் ஹீட் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் இடையே ஞாயிற்றுக்கிழமை மகளிர் பிக் பாஷ் லீக் 2023 போட்டி நடைபெற்றது. இதில், பிரிஸ்பேன் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், போட்டியின் 13வது ஓவரில் அந்த அணியின் தொடக்க வீராங்கனை கிரேஸ் ஹாரிஸின் பேட் உடைந்துள்ளது. இதையடுத்து அவர் தனக்கு புதிய பேட் வேண்டும் என அணியினரிடம் கூறியுள்ளார். அந்த பேட் வர தாமதமான நிலையில், உடைந்த பேட்டுடனே அடுத்த பந்தை எதிர்கொண்ட கிரேஸ், பந்தை சிக்சருக்கு 72 மீட்டர் தூரம் விளாசினார். எனினும் பேட்டின் கைப்பிடி முட்டையிலிருந்து இரண்டாக உடைந்து தூர விழுந்தது. இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Grace Harris blast sixer with broken bat

புதிய சாதனை படைத்த கிரேஸ் ஹாரிஸ்

பேட் இரண்டாக உடைந்தது ஒருபுறம் இருக்க, 59 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 136 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் மகளிர் பிக் பாஷ் லீக் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் அடித்த வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார். மேலும், ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர் அடித்த சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதன் மூலம் 2021 இல் மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிராக சிட்னி தண்டர் அணிக்காக ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனாவின் முந்தைய அதிகபட்ச ஸ்கோரை ஹாரிஸ் முறியடித்தார். இதற்கிடையே, போட்டியை பொறுத்தவரை கிரேஸின் அதிரடி சதத்தால் 50 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் வெற்றி பெற்றது.