Page Loader
டி20 உலகக் கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம்: ஹாட்ஸ்டார் 
எவ்வித கட்டணமின்றி, மொபைல் போனில் அனைவரும் இலவசமாக காணலாம்

டி20 உலகக் கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம்: ஹாட்ஸ்டார் 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2024
06:07 pm

செய்தி முன்னோட்டம்

ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் நிகழ்வுகளை மொபைல் போனில் இலவசமாக பார்க்கலாம் என்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டி20 உலகக் கோப்பை ஜூன் 1ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறும். இந்த போட்டிகளை, எவ்வித கட்டணமின்றி, மொபைல் போனில் அனைவரும் இலவசமாக காணலாம் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனை ஜியோ நிறுவனம் இலவசமாக ஒளிபரப்பு செய்ய உள்ள நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளை ஹாட்ஸ்டார் நிறுவனம் இலவசமாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

embed

டி20 உலகக் கோப்பை போட்டி

Iss June 1st se, kuch 'Out Of This World' sa aane wala hai. Taiyaar ho na? Watch it for Free on mobile only with #DisneyplusHotstar #T20WorldCup #100DTG #Cricket #TeamIndia pic.twitter.com/f3ekBFUVZh— Disney+ Hotstar (@DisneyPlusHS) March 6, 2024