வீடியோ : தேவையில்லாமல் ரன் அவுட் ஆனதால் கோபத்தில் பேட்டை தூக்கி வீசிய ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் பெத் மூனி மற்றும் மெக் லானிங் முறையே 54 மற்றும் 49* ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் 172/4 ரன்களை குவித்தது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அணிக்கு நம்பிக்கையை கொண்டு வந்தனர். இருப்பினும், இந்தியா ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்நிலையில், இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் 15வது ஓவரில், 52 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இது அவரை ஏமாற்றமடைய செய்த நிலையில், அதிருப்தியுடன் பேட்டை தூக்கி எறியும் வீடியோ வைரலாகி வருகிறது.