Page Loader
இந்திய செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை சந்தித்த போடேஸ் சகோதரிகள்
இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்

இந்திய செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை சந்தித்த போடேஸ் சகோதரிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2024
09:28 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க-கனடிய செஸ் வீராங்கனையான அலெக்ஸாண்ட்ரா வலேரியா போட்டேஸ் தனது சகோதரி ஆண்ட்ரியாவுடன் பழம்பெரும் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துடன் இணைந்து எடுத்த ஒரு புகைப்படத்தை எக்ஸ்இல் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், விஸ்வநாதன் ஆனந்த் நடுவில் நிற்க, ​​போட்டேஸ் சகோதரிகள் - அலெக்ஸாண்ட்ரா மற்றும் ஆண்ட்ரியா இருபக்கமும் போஸ் கொடுத்தபடி அவரது பக்கத்தில் நின்றிருந்தனர். அலெக்ஸாண்ட்ரா மற்றும் ஆண்ட்ரியா இருவருமே செஸ் வீரர்கள். இந்த புகைப்படத்தை தாண்டி இணையத்தின் கவனத்தை ஈர்த்தது அந்த இடுகையின் தலைப்பு தான். நேற்று, பிப்ரவரி 29 அன்று எக்ஸ் தளத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்த அலெக்ஸாண்ட்ரா அதற்கு ஒரு வேடிக்கையான தலைப்பிட்டார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

விஸ்வநாதன் ஆனந்தை சந்தித்த போடேஸ் சகோதரிகள்