Ind vs Pak: 47வது ஒருநாள் சதமடித்து விராட் கோலி சாதனை
'இந்தியாவின் ரன் மெஷின்' என அழைக்கப்படும் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 47வது சதத்தை அடித்து சாதனை புரிந்துள்ளார். கொழும்பில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 தொடரின் ரிசர்வ் நாளில் அவர் இந்த சாதனையை புரிந்தார். சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்ய கோலிக்கு இப்போது இரண்டு சதங்கள் மட்டுமே தேவை. இதே போட்டியின் போது, கோலி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு களத்திற்கு வந்த கோலி, ஷுப்மான் கில் உடன் ஆட்டத்தை தொடங்கினார். இன்னிங்ஸ் பிரேக்கின் போது விராட் கோலி (122) ரன்கள் பெற்று ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
விராட் கோலி சாதனை
A monumental achievement today as @imVkohli crosses the 13,000-run mark in ODIs! Your unwavering commitment and exceptional consistency in the game make you a true cricketing legend. Keep those runs flowing and continue making us proud! 🇮🇳 pic.twitter.com/qS1UIZXEa4— Jay Shah (@JayShah) September 11, 2023