Loading...
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி: சேஸிங்கில் அதிக ரன்கள் குவித்து புதிய வரலாறு
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி: சேஸிங்கில் அதிக ரன்கள் குவித்து புதிய வரலாறு

எழுதியவர் Vasuki
Nov 04, 2026
07:10 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலக்கைத் துரத்துவதில் சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால உலக சாதனையை விராட் கோலி முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் 143 ரன்கள் என்ற திருத்தப்பட்ட இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, விராட் கோலியின் ஆட்டத்தால் 22.4 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே ஆட்டமிழந்த போதிலும், கேப்டன் ஷுப்மன் கில்லுடன் இணைந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி, 51 பந்துகளில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 74 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய வழிகாட்டினார்.

மைல்கல்

ரன் மெஷின் விராட் கோலி

ஒருநாள் போட்டிகளில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி தகர்த்துள்ளார்.

சச்சின் 242 போட்டிகளில் 17 சதங்கள், 52 அரைசதங்களுடன் 8,720 ரன்கள் எடுத்திருந்த சூழலில், கோலி தற்போது 30 சதங்கள், 46 அரைசதங்களுடன் 8,726 ரன்கள் குவித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும், வெற்றி பெற்ற போட்டிகளில் இலக்கைத் துரத்தி அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் 6,477 ரன்களுடன் கோலி முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.

இதில் சச்சின் 5,490 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

ரிக்கி பாண்டிங் சாதனை சமன்

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை (1,971 ரன்கள்) விராட் கோலி சமன் செய்துள்ளார்.

அத்துடன், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3-வது வரிசையில் களமிறங்கி 13,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக 318 ஒருநாள் போட்டிகளில் 55 சதங்கள், 80 அரைசதங்களுடன் 15,183 ரன்களைக் குவித்து சர்வதேச அளவில் கோலி தனது அசைக்க முடியாத கிரிக்கெட் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT