Page Loader
ஆசிய கோப்பை 2023 : சச்சின், பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
ஆசிய கோப்பை 2023இல் சச்சின், பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

ஆசிய கோப்பை 2023 : சச்சின், பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 17, 2023
06:51 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடரில் கவனிக்க வேண்டிய பேட்டர்களில் இந்திய வீரர் விராட் கோலியும் உள்ளார். ஆசிய கோப்பையின் ஒருநாள் வடிவ கிரிக்கெட்டில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 61.30 என்ற சராசரியை 613 ரன்கள் குவித்துள்ளார். இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கருக்கு (49) அடுத்தபடியாக இரண்டாவது அதிக சதமடித்தவராக கோலி (46) உள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 111 அரைசதங்களுடன் ரிக்கி பாண்டிற்கு (112) அடுத்த இடத்தில் உள்ளார். இந்நிலையில், ஆசிய கோப்பையில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Virat Kohli set to beat Sachin record in ODI

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ரன்கள் சாதனையை எட்டும் விராட் கோலி

ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் (18,426), குமார சங்ககாரா (13,975), ரிக்கி பாண்டிங் (13,589), மற்றும் சனத் ஜெயசூர்யா (13,364) ஆகியோர் மட்டுமே இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதில் மிக அதிவேகமாக 13,000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையையும் சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ளார். விராட் கோலி தற்போது 265 இன்னிங்ஸில் 12,898 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். 13,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டுவதற்கு அவருக்கு இன்னும் 102 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. மேலும், அடுத்த 55 இன்னிங்ஸ்களில் எப்போது இந்த மைல்கல்லை எட்டினாலும், 13,000 ரன்களை அதிவேகமாக எடுத்த ஒருநாள் கிரிக்கெட் பேட்டர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார்.