ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் எடுத்து ரோஹித்-கோலி ஜோடி சாதனை
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடியாக தங்கள் பார்ட்னர்ஷிப்பில் 5,000 ரன்களை கடந்துள்ளனர். ஆசிய கோப்பை 2023 தொடரில் நடந்து வரும் சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இதன் மூலம், உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை கடந்த எட்டாவது ஜோடி என்ற பெருமையை பெற்றதோடு, அதிவேகமாக இந்த மைல்க்கல்லை எட்டி புது சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னர், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆகியோர் இந்த சாதனையை தக்கவைத்திருந்த நிலையில், ரோஹித்-கோலி ஜோடி அதை முறியடித்துள்ளது.
86வது இன்னிங்ஸில் 5,000 ரன்கள்
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஜோடி ஒன்றாக இணைந்து 86வது இன்னிங்ஸில் 5,000 ரன்களை எட்டியதன் மூலம், அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய ஜோடி ஆனது. இதற்கு முன்பு கிரீனிட்ஜ் மற்றும் ஹெய்ன்ஸ் இந்த சாதனையை 97 இன்னிங்ஸ்களில் எடுத்திருந்ததே அதிவேகமாக இருந்தது. மேலும் இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது ஜோடி ஆனது. ஜாம்பவான்களான சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்திய அளவில் 8,227 பார்ட்னர்ஷிப்பில் எடுத்துள்ளனர். இதற்கிடையில், ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா ஜோடி 5,193 ரன்கள் எடுத்து அடுத்த இடத்தில் உள்ளது.
இந்த காலவரிசையைப் பகிரவும்