ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 இல் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரரான விராட் கோலி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிய கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி சதமடித்தாலும், இறுதியில் குஜராத் டைட்டன்ஸிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த சதத்தின் மூலம் ஐபிஎல்லில் அதிக சதமடித்தவர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார்.
what virat kohli said
விராட் கோலியின் சமூக ஊடக பதிவு
பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விராட் கோலி பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில், "இந்த சீசன் சில நல்ல தருணங்களைக் கொண்டிருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இலக்கை அடையவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தாலும், நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.
இதுவரை ஒவ்வொரு தருணத்திலும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. பயிற்சியாளர்கள், நிர்வாகம் மற்றும் எனது அணியினருக்கு நன்றி.
நாங்கள் அடுத்த சீசனில் வலுவாக திரும்புவோம்." என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 இன் 14 போட்டிகளில், அவர் 639 ரன்களை எடுத்தார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஆறு அரைசதங்கள் அடித்தார்.