அடுத்த செய்திக் கட்டுரை

விராட் கோலிக்கு "லிப்லாக்" கொடுத்த ரசிகை: கடைசியில் ட்விஸ்ட்! வைரலாகும் வீடியோ!
எழுதியவர்
Sekar Chinnappan
Feb 22, 2023
12:07 pm
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ரசிகை ஒருவர் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்னவெனில், டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகுச் சிலை உள்ளது. இந்த மெழுகு சிலைக்கு தான் ரசிகை முத்தம் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாக நிலையில், பலரும் இது முறையற்ற செயல் என அந்த பெண்ணுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் பலர், கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மாவை டேக் செய்து அவரது கருத்து என்ன என்பது போல் கேட்டு வருகின்றனர்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையின்போது ரசிகர்கள் எல்லை மீறுவது குறித்து கோலியே வீடியோ வெளியிட்டு கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் லிப் லாக் வீடியோ
With a statue... pic.twitter.com/TXU67kSlYz
— Gems of Simps (@GemsOfSimps) February 20, 2023