
விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது; குவியும் வாழ்த்துகள்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், தங்களுக்கு இரண்டாவது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அவர்கள் இந்த நற்செய்தியை, சமூக ஊடகத்தின் வாயிலாக உலகிற்கு அறிவித்தனர்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 2023 இல், அவர்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று செய்திகள் பரவத் தொடங்கின.
இருப்பினும், இருவரும் அந்த நேரத்தில் எதையும் உறுதிப்படுத்தவில்லை.
கடந்த பிப்ரவரி 15 அவர்களுக்கு குழந்தை பிறந்தது என்பதையும் அந்த அறிக்கையில் தெரிவித்தனர் இந்த ஸ்டார் தம்பதிகள்.
இந்த அறிவிப்பு வெளியானதும், ரசிகர்களும் மற்றும் பிரபலங்களும் இருவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமணம்
'விருஷ்கா'வின் காதல் டு கல்யாணம்
2013ஆம் ஆண்டு விளம்பர ஷூட்டிங் போது விராட் கோலி, அனுஷ்கா சர்மா மீது காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக டேட்டிங் செய்த பிறகு, அவர்கள் டிசம்பர் 2017இல் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
ரசிகர்களால் அன்பாக "விருஷ்கா" என்று அழைக்கப்பட்ட இருவரும், ஜனவரி 2021இல், தங்கள் முதல் குழந்தையான வாமிகா என்ற மகளை வரவேற்றனர்.
முன்னதாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், அனுஷ்கா ஷர்மா-கோலியின் 2வது கர்ப்பத்தை பற்றி உலகிற்கு தெரியப்படுத்தியிருந்தார். எனினும், அடுத்த நாளே அதை மறுத்து விட்டார்.
'விருஷ்கா' ஜோடி தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பகிர்வதை விரும்பாதவர்கள். அதனாலயே இன்றளவும் தங்கள் மகள் வாமிகாவின் முகத்தை வெளிக்காட்டாமல் பாதுகாத்து வருகின்றனர்.