Page Loader
விஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம்
விஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம்

விஜய் ஹசாரே டிராபியில் கேரள அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சதம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 05, 2023
07:51 pm

செய்தி முன்னோட்டம்

செவ்வாய்க்கிழமை நடந்த 2023 விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக கேரளாவின் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேரள அணியின் கேப்டனாக உள்ள சஞ்சு சாம்சன் 139 பந்துகளில் 128 ரன்களை எடுத்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இருப்பினும், அவரது சதம் கேரளா அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. கேரளா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டு, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. முன்னதாக, கேரளா 8.5 ஓவரில் 26/3 என தத்தளித்து கொண்டிருந்த போது களத்திற்கு வந்த சஞ்சு சாம்சன் கடைசி வரை போராடியதால் அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Sanju Samnson vijay hazare trophy record

2023 விஜய் ஹசாரே கோப்பையில் சாம்சனின் சராசரி 52.80

விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரில் கேரளாவுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் ஆறு இன்னிங்ஸ்களில் 52.80 சராசரியில் 264 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் அரைசதம் அடங்கும். இதற்கிடையே, 29 வயதான சஞ்சு சாம்சன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 124 போட்டிகளில் 33.38 சராசரியுடன் 3,338 ரன்கள் குவித்துள்ளார். இந்த வடிவத்தில் இரண்டு சதங்கள் மற்றும் 16 அரைசதங்களையும் அவர் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோரான 212 (நாட் அவுட்) 2019 விஜய் ஹசாரே கோப்பையில் கோவாவுக்கு எதிராக எடுக்கபப்ட்டது. இதற்கிடையே, சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக 13 ஒருநாள் போட்டிகளில் 55.71 சராசரியில் 390 ரன்கள் குவித்துள்ளார்.அதில் மூன்று அரைசதங்களும் அடித்துள்ளார்.