வைரல் வீடியோ: 'லுங்கி டான்ஸ்' பாடலுக்கு நடனம் ஆடி வெற்றியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி
உலகக் கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், இந்த போட்டியின் மூலம் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்கள் வெற்றியை இந்திய பாடல்களுக்கு நடனமாடி கொண்டாடினர். இந்நிலையில், 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் வரும் 'லுங்கி டான்ஸ்' பாடலுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் குத்தாட்டம் போடும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் சமையல் பாத்திரங்களை இசை கருவிகளாக பயன்படுத்தி கொண்டாடிய வீடியோவையும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்(ஏசிபி) பகிர்ந்துள்ளது. நேற்று நடந்த போட்டிக்கு அடுத்தபடியாக, வரும் அக்டோபர் 30-ம் தேதி ஆப்கானிஸ்தான் இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது.