Page Loader
ஒருநாள் உலகக்கோப்பை 2023 : தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா
ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா

எழுதியவர் Sekar Chinnappan
Apr 05, 2023
04:36 pm

செய்தி முன்னோட்டம்

செவ்வாயன்று (ஏப்ரல் 4) ஜெர்சியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றுக்கு அமெரிக்கா முன்னேறியுள்ளது. நமீபியாவில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோனாங்க் பட்டேல் தலைமையிலான அமெரிக்க அணி, 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஜெர்சி பேட்டிங் செய்த நிலையில், அலி கானின் அபார பந்துவீச்சில் 206 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து அமெரிக்கா வெற்றி பெற்றது. அலி கான் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து ஜிம்பாப்வேயில் ஜூன்-ஜூலையில் நடக்க உள்ள இறுதி தகுதிச் சுற்றில் முதலிடத்தை உறுதி செய்தது. முன்னதாக யுனைடெட் அரபு எமிரேட்ஸும் இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதி தகுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ட்விட்டர் அஞ்சல்

அமெரிக்க கிரிக்கெட் அணி தகுதி சுற்றுக்கு முன்னேற்றம்