ஜூலை 5 முதல் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர், வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
இந்த தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெறுகின்றன.
TNPL தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 4-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் அஸோஸியேஷன் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 28 லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப் சுற்றில் 3 ஆட்டங்கத்தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும்.
இந்த போட்டிகள், திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன.
தகுதி சுற்று 2 மற்றும் இறுதிப் போட்டி மட்டும் சென்னையில் நடைபெறும்.
சேலத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன
ட்விட்டர் அஞ்சல்
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்
#sportupdate | TNPL தொடருக்கான அட்டவணை வெளியீடு#TNPL | #Cricket | #Chennai | #NewsTamil24x7 pic.twitter.com/kL7RTh2E5O
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) April 3, 2024