Page Loader
வாஷிங்டன் சுந்தர் விலகல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு
காயம் காரணமாக ஐபிஎல் 2023 எஞ்சிய போட்டிகளில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

வாஷிங்டன் சுந்தர் விலகல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 27, 2023
12:43 pm

செய்தி முன்னோட்டம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் 2023 இன் எஞ்சியிருக்கும் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இனி நடப்பு சீசனில் பங்கேற்க மாட்டார் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் இந்த சீஸனின் முதல் 6 போட்டிகளிலும் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், கடைசியாக விளையாடிய ஏழாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 24 ரன்களும் எடுத்து சிறப்பான ஃபார்மிற்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், காயம் காரணமாக விலகியுள்ளது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post