ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் : புதிய மைல்கல் சாதனையை எட்டும் ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் எனும் மைல்கல்லை புதன்கிழமை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 5,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்ட ஸ்டீவ் ஸ்மித்திற்கு இன்னும் 61 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. முன்னதாக, மும்பை வான்கடேவில் நடந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் ஸ்மித் 22 ரன்கள் எடுத்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்யவில்லை.
ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர்கள்
இந்த மைல்கல்லை எட்டினால் ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்த 17வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெறுவார். ரிக்கி பாண்டிங் 13,589 ரன்களுடன் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதே நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு முன்னதாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 5,088 ரன்களுடன் 16வது இடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 141 ஒருநாள் போட்டிகளில், 44.90 என்ற சராசரியில் 4,939 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 சதங்கள் மற்றும் 29 அரைசதங்கள் அடங்கும். மேலும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களில் ஆறாவது அதிக சதம் அடித்த வீரராகவும் ஸ்டீவ் ஸ்மித் உள்ளார்.