Page Loader
வங்கதேச கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்
வங்கதேச கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்

வங்கதேச கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2023
06:37 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் புதிய தொழில்நுட்ப ஆலோசகராக வியாழக்கிழமை (செப்டம்பர் 21) இணைந்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, ஸ்ரீதரன் ஸ்ரீராம் செப்டம்பர் 27 அன்று குவாஹாத்தியில் வங்கதேச அணியுடன் இணைவார். வரவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் வங்கதேச அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட தயாராகி வருகிறது. இந்நிலையில், தொழில்நுட்ப ஆலோசகராக இணையும் ஸ்ரீதரன், இந்த மாதம் அணியின் இயக்குநராக இணைந்த கலீத் முகமதுக்கு இந்திய நிலைமைகள் குறித்த விமர்சன அறிவை வழங்குவார்.

Sridharan Sriram experience with Bangladesh

தொழில்நுட்ப ஆலோசகராக ஸ்ரீதரன் ஸ்ரீராமின் பணி

பெரும்பாலான வங்கதேச வீரர்கள் இந்தியாவில் விளையாடிய அனுபவம் கொண்டிராததால், புதிய தொழில்நுட்ப ஆலோசகராக ஸ்ரீதரன் ஸ்ரீராம், இந்தியாவின் வானிலை மற்றும் ஆடுகளம் பற்றிய தகவல்களை வீரர்களுக்கு வழங்குவார். அணிக்கு ஸ்ரீராமின் உள்ளீடு மிக முக்கியமானதாக இருக்கும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகி யூனுஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக 2022ஆம் ஆண்டில் வங்கதேச கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசகராக ஸ்ரீராம் விளையாடினார் மற்றும் டி20 போட்டிகளில் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார். அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது மற்றும் குழுநிலை கடைசி ஆட்டம் வரை அரையிறுதி வாய்ப்புக்கான போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.