
ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது இலங்கை
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் 2023இல் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியிருந்தது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டாலும், இலங்கை ஒரு வலுவான அணியுடன் களமிறங்க உள்ளது.
அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து தசுன் ஷனக விலக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அவரே அணியின் தலைவராக செயல்பட உள்ளார்.
எனினும், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோரின் உடற்தகுதி குறித்து தெளிவாக தெரியவில்லை.
Srilanka Squad for ODI WC 2023
ஒருநாள் உலகக்கோப்பைக்கான இலங்கை அணி வீரர்களின் பட்டியல்
வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷான் மதுஷங்க உடற்தகுதி குறித்து இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளிப்படையாத தெரிவித்துளளதுடன், அவர்கள் அணியில் இடம்பெறுவது உடற்தகுதியைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளது.
வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகிய இருவரும் தொடை காயத்துடன் போராடி வரும் நிலையில், மதுஷங்க பயிற்சியின் போது தசை கிழிந்து காயத்தால் அவதிப்படுகிறார்.
இலங்கை அணி: தசுன் ஷனக, குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித், திமுத் கருணாரத்ன, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, மதீஷ பத்திரன, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷான் மதுஷங்க.
காத்திருப்பு வீரர்கள் : துஷான் ஹேமந்த மற்றும் சாமிக கருணாரத்ன.