LOADING...
ஐபிஎல் 2026: வான்கடேயில் 244 ரன் இலக்கை முறியடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வரலாற்று சாதனை
வான்கடேயில் 244 ரன் இலக்கை முறியடித்து எஸ்ஆர்எச் வரலாற்று சாதனை

ஐபிஎல் 2026: வான்கடேயில் 244 ரன் இலக்கை முறியடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வரலாற்று சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 30, 2026
06:47 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 244 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரையான் ரிக்கெல்டன் சதம் விளாசிய போதிலும், ஹைதராபாத் அணியின் ஒருங்கிணைந்த அதிரடி ஆட்டம் அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் ஹைதராபாத் அணி நடப்புத் தொடரில் தனது ஐந்தாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

மும்பை இந்தியன்ஸின் அதிரடி பேட்டிங் மற்றும் ரிக்கெல்டன் சதம்

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, ரையான் ரிக்கெல்டனின் அபார ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களைக் குவித்தது. ரிக்கெல்டன் 55 பந்துகளில் 123* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார், இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவர் தனது சதத்தை வெறும் 44 பந்துகளில் எட்டினார், இது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக சதமாகும். இவருடன் இணைந்து வில் ஜாக்ஸ் (46 ரன்கள்) மற்றும் ஹர்திக் பாண்டியா (31 ரன்கள்) அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினர்.

இமாலய இலக்கு

ஹைதராபாத் அணியின் இமாலய இலக்கு வேட்டை

244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு, அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி மின்னல் வேகத் தொடக்கத்தை அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 129 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 76 ரன்களும், அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களின் அதிரடித் தொடக்கம் ஹைதராபாத் அணிக்குத் தேவையான ரன் விகிதத்தை ஆரம்பத்திலேயே உறுதி செய்தது.

Advertisement

ஃபினிஷிங்

கிளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டியின் பொறுப்பான ஆட்டம்

தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த பிறகு, ஹென்ரிச் கிளாசன் பொறுப்புடன் ஆடி 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். நிதீஷ் ரெட்டியுடன் இணைந்து 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார். இறுதியில் சலில் அரோரா 10 பந்துகளில் 30* ரன்கள் விளாசி, 19.2 ஓவர்களிலேயே ஹைதராபாத் அணியை வெற்றி பெறச் செய்தார்.

Advertisement

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியல் மற்றும் சாதனைகள்

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 425 ரன்களுடன் அபிஷேக் சர்மா தற்போது ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இது ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட நான்காவது அதிகபட்ச இலக்காகும். மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திலேயே நீடிக்கிறது.

Advertisement