Sports RoundUp: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா; ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வீரர்களின் செயல்பாடு; மேலும் பல முக்கிய விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் தொடக்க நேற்று முன்தினம் சீனாவின் ஹாங்சௌ மாகாணத்தில் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
முதல் நாளான நேற்றே படகோட்டுதல், துப்பாச்சி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பதக்கப் போட்டிகளும், வாலிபால், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் தகுதிச் சுற்றுகளும், டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் எலிமினேஷன் போட்டிகளும் நடைபெற்றன.
முதல் நாள் முடிவில் 20 தங்கம், 7 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது சீனா. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இடம்பிடித்திருக்கின்றன. மேலும் படிக்க...
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்கள்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் நாளில் மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.
படகோட்டுதலில் ஆடவர் லைட்லெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அர்விந்த் சிங் இணை வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது.
அதேபோல், படகோட்டுதலில் எட்டு பேர் கொண்ட குழு பிரிவிலும் இந்த அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறது. இத்துடன் படகோட்டுதலில் மூன்று பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.
துப்பாக்கிச் சுடுதலின் 10மீ ஏர் ரைபிள் குழு போட்டியில் இந்திய மகளிர் அணியானது வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறது. மேலும், மகளிர் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ரமிதா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். மேலும் படிக்க...
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடரை வென்றை இந்தியா:
அக்டோர் 5ம் தேதி தொடங்கவிருக்கும் உலக கோப்பைக்கு முன்பாக, தற்போது ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது இந்தியா.
கடந்த வெள்ளியன்று நடைபெற்ற முதல் போட்டியில் சிரமமின்றி ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி. அதேபோல், பேட்டிங்கிற்கு சாதகமான நேற்றைய இந்தூர் மைதானத்திலும் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டிருக்கிறது இந்தியா
பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலுமே ஆஸ்திரேலியா சொதப்ப, இரண்டிலுமே சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி போட்டியையும், தொடரையும் வென்றிருக்கிறது இந்தியா.
இந்தியா சார்பில், சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோர் சதம் கடந்து அசத்தினர். மேலும் படிக்க...
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெளியேறிய இந்திய வீரர்கள்:
தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரின் சில விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்றிருந்தாலும், பல விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.
டேபிள் டென்னிஸ் குழு பிரிவில், இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி இரண்டுமே ரவுண்டு ஆஃப் 16 மற்றும் காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறி அதிர்ச்சியளித்திருக்கிறது.
வாலிபாலில் இந்தியாவிற்கான பதக்க வாய்ப்புகள் குறைவாக இருந்த போதிலும், இந்திய வாலிபால் அணி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது. எனினும், காலிறுதிச் சுற்றில் ஜப்பானிடம் சரணடைந்து பதக்க வாய்ப்பை இழந்தது இந்தியா.
அதேபோல், வாள்வீச்சு, நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் இந்திய வீரர்கள் காலிறுதி மற்றும் இறுதி வரை முன்னேறி பதக்க வாய்ப்பை தவறவிட்டிருக்கின்றனர். மேலும் படிக்க...
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
எந்தெந்த விளையாட்டுகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது இந்தியா:
இந்தாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மற்றும் சதுரங்க விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இரண்டு விளையாட்டுக்களிலுமே இந்தியாவிற்கான பதக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இன்று நடைபெறவிருக்கும் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சதுரங்கத்திலும் இந்திய அணியினர் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த இரண்டு விளையாட்டுக்களைத் தவிர்த்து, டென்னிஸ், குத்துச்சண்டை, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16 தங்கம், 23 வெள்ளி மற்றும் 31 வெண்கலப் பதக்கங்களைக் இந்தியா கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க...