ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய செய்திகள்
கேலோ இந்தியா போட்டிகளின் 3வது நாளான நேற்று இறுதியில் தமிழக அணி மேலும் இரு தங்கபதக்கங்களை வென்றுள்ளது. 3-வது நாள் முடிவில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 4 தங்கம், 2 வெண்கலம் என்று 6 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. நேற்று நடைபெற்ற கேலோ இந்தியா போட்டி தொடரில், யோகாசனப் போட்டியின் கலாசார பிரிவில் தமிழக வீராங்கனை நவ்யா 64.75 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். அதேபோல, வாள்வீச்சு போட்டியில் சிறுவர்களுக்கான இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் அர்லின் 15-14 என்ற புள்ளி கணக்கில் தங்கப்பதக்கத்தை வென்றார். கபடி போட்டியில், ஆண்கள் அணி அரையிறுதியில் தோல்வியடைந்த நிலையில், பெண்கள் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஜோகோவிச்
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் பல முன்னணி டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், அட்ரியன் மன்னரினோவை தோற்கடித்து காலிறுதி சுற்றிற்கு முன்னேறியுளார். 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் இது ஜோகோவிச்சின் 58-வது காலிறுதி போட்டியாகும். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாமில் அதிக முறை காலிறுதியை எட்டிய வீரரான ரோஜர் பெடரரின் சாதனையையும் சமன் செய்துள்ளார் ஜோகோவிச்.
ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்ஸ்: இந்தியாவின் மான் சிங் தங்கம் வென்று சாதனை
ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி ஹாங் காங்கில் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 34 வயதான மான் சிங் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 2 மணி 16 நிமிடம் 58 வினாடிகளில் கடந்து சிந்தனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஹுயாங் யோங்ஜாங் இதே தூரத்தை 2 மணி 15 நிமிடம் 24 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல, கிர்கிஸ்தான் வீரர் தியாப்கின், இந்த தூரத்தை கடக்க 2 மணி 18 நிமிடம் 18 வினாடிகளில் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்தியா வீரரான ஏ.பி. பெல்லியப்பா, 6 வது இடத்தை பிடித்தார்.
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி: சாத்விக் சிராஜ் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இரண்டாம் இடம்
டெல்லியில் நடைபெற்று வந்த இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சிராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, தென் கொரியாவின் காங் மின் ஹியுக் மற்றும் சியோ செயுங் ஜே ஜோடியுடன் மோதியது. மிகவும் பரபரப்பான இந்த இருந்து போட்டியில், சாத்விக்-சிராஜ் ஜோடியா, தனது முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும் 2ஆவது செட்டை 11-21 கணக்கில் இந்த ஜோடி இழந்தது. தொடர்ந்து ஆடிய கடைசி செட்டையும் 21-18 என்ற கணக்கில் தென் கொரியா ஜோடி கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் சாத்விக் சிராஜ் ஜோடி 2ஆவது இடத்தை பிடித்தது.